தேசிய அளவில் இயங்கும் மத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆயுதங்களுடன் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஊடுருவி இருப்பதாகவும், அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தமிழ்நாடு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் துறை கூடுதல் தலைமை இயக்குநர் அலுவலகத்திலிருந்து இரு மாவட்ட காவல் துறையினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மாவட்ட எல்லை வழியாக நகரங்களுக்குள் வரும் வாகனங்களை தீவிரமாக கண்காணிக்கவும், போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள பிரமுகர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பதற்றமான சூழல் ஏற்படும் வாய்ப்பு இருந்தால் உடனடியாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் தேவைப்பட்டால் கலவர தடுப்பு படையினரை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்ட்டுள்ளது.