தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் பராமரிக்கப்பட்டு வந்த நரிக்குட்டி வேலூர் விலங்கியல் பூங்காவுக்கு மாற்றம்!

கோவை வனத்துறை அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த நரிக்குட்டி வேலூர் விலங்கியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

fox
கோவை

By

Published : Jul 4, 2023, 10:12 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட மலுமிச்சம்பட்டி பகுதியில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வித்தியாசமான தோற்றத்தில் நாய் குட்டிகள் புதருக்குள் இருப்பதாக மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து மதுக்கரை வனச்சரகர் சந்தியா தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று பார்த்த போது, அவை நாய் குட்டிகள் இல்லை, நரி குட்டிகள் என்பது தெரியவந்தது.

கோவை விலங்குகள் பராமரிப்பு மையத்தில் நரிக்குட்டி

இதையடுத்து பிறந்து சில நாட்களே ஆன அந்த நரிக் குட்டிகளை கோவை மாவட்ட வன அலுவலர் வளாகத்தில் உள்ள விலங்குகள் பராமரிப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர். பிறகு வனத்துறையினருடன் தன்னார்வ அமைப்பினர் இணைந்து குட்டிகளை பராமரித்து வந்தனர். அதில், நான்கு குட்டிகள் உயிரிழந்த நிலையில், ஒரே ஒரு குட்டி மட்டும் உயிர் பிழைத்திருந்தது. அதை நன்கு கவனித்து வந்த ஊழியர்கள், அதற்கென தனி இறைச்சி உணவுகளை வழங்கி பராமரித்து வந்தனர். இதனால் அந்த நரிக் குட்டி உடல் நலத்துடன் ஆரோக்கியமாக உள்ளது.

கோவை விலங்குகள் பராமரிப்பு மையத்தில் நரிக்குட்டி

இதனை அடுத்து தலைமை வன உயிரின பாதுகாவலர் உத்தரவின் பேரில், இந்த நரிக் குட்டி வேலூர் மாவட்டத்தில் புதிதாக அமைந்துள்ள விலங்கியல் பூங்காவிற்கு இன்னும் சில நாட்களில் கொண்டு செல்லப்பட உள்ளது. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், "வழக்கமாக நரிகள் அடர்ந்த வனப்பகுதி மற்றும் ஊருக்கு ஒதுக்குப்புறமான காடுகளில் மட்டுமே காணப்படும். நரிகள் கிராமத்திற்கு அருகே உள்ள காட்டு பகுதிக்குள் வந்த நிலையில் குட்டிகளை ஈன்றிருக்கலாம்.

அப்போது, ஏற்பட்ட இடையூறு காரணமாக தாய் நரி அங்கிருந்து சென்றிருக்கிலாம். குட்டிகளை இரண்டு நாட்கள் அதே இடத்தில் வைத்து தாயுடன் சேர்க்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டோம். அவை பலனளிக்காததால் பராமரிப்பு மையத்திற்கு கொண்டு வந்தோம். பிறந்து சில நாட்களே ஆன குட்டிகளில் நான்கு குட்டிகள் உயிரிழந்த நிலையில், ஒரே ஒரு குட்டி மட்டும் உயிர் பிழைத்தது.

கோவை விலங்குகள் பராமரிப்பு மையத்தில் நரிக்குட்டி

அதனை பராமரித்து வந்தோம். கோவை மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் உடல் நலம் பாதிக்கப்படும் அரிய வகை கழுகுகள், மயில், கிளிகள் ஆகியவை பராமரிக்கப்பட்டு வருகிறது. அதனுடன் இந்த நரி குட்டியும் பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த நரி வளர்ந்து விட்டதால் அதனை வேலூர் விலங்கியல் பூங்காவுக்கு கொண்டு செல்ல இருக்கிறோம்" என்றனர்.

இதையும் படிங்க: மயில் மீது பெண் புகார் - கர்நாடகாவில் அதிர்ச்சி

ABOUT THE AUTHOR

...view details