தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்ப பிரச்சனையை வரதட்சணை வழக்காக மாற்றிய காவல் ஆய்வாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்! - dowry case

சாதாரண குடும்ப பிரச்சனையை வரதட்சணை வழக்காக மாற்றிய காவல் ஆய்வாளருக்கு மனித உரிமை கமிஷன் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

குடும்ப பிரச்னை வழக்கை வரதட்சணை வழக்காக மாற்றிய காவல் ஆய்வாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்!
குடும்ப பிரச்னை வழக்கை வரதட்சணை வழக்காக மாற்றிய காவல் ஆய்வாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்!

By

Published : Aug 3, 2022, 9:22 AM IST

Updated : Aug 3, 2022, 3:40 PM IST

கோயம்புத்தூர்: சிறுமுகை எஸ்.ஆர்.எஸ் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். பொறியாளரான இவர், இதற்கு முன்பு வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மீனாம்பிகை, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தார்.

இதனால் விஜயகுமார் ஐந்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் மாநில மனித உரிமை ஆணையத்தில் விஜயகுமார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “சாதாரண குடும்ப தகராறை, சரியாக விசாரிக்காமல் வரதட்சணை கொடுமை என்று தவறாக வழக்குப்பதிவு செய்து என்னை சிறையில் அடைத்து மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர். இதற்காக ஆய்வாளர் மீனாம்பிகை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவின் அடிப்படையில் விசாரணை நடத்திய மாநில மனித உரிமை கமிஷன், ஆய்வாளர் மீனாம்பிகைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. மேலும் இந்த தொகையை பாதிக்கப்பட்ட விஜயகுமாருக்கு 4 வாரத்துக்குள் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:அடுக்குமாடி குடியிருப்பில் ஆளில்லா வீட்டில் ஆட்டையை போடும் திருடன்

Last Updated : Aug 3, 2022, 3:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details