கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேடு சாலை ஹோப் காலேஜ் அருகே ஒரு வீட்டில் கரோனா இல்லாதவர்களுக்கு தொற்று உள்ளது என்று கூறி முத்திரை குத்திய கோவை மாநகராட்சிக்கு வாழ்த்து தெரிவித்து பேனர் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த வீட்டின் உரிமையாளரிடம் விசாரித்தபோது, கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி எனது தந்தை கரோனாவால் பாதிக்கப்பட்டு ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியன்று கோவை மாநகராட்சி சார்பில் எனது குடும்பத்தில் 4 பேருக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதன் முடிவுகள் 3ஆம் தேதியன்று வெளியானது.
இதில் வீட்டு உரிமையாளர் கரோனா பரிசோதனை செய்து கொள்ளவில்லை எனக் கூறுகிறார். இந்நிலையில், அந்த வீட்டில் 4 பேருக்கும் கரோனா இருப்பதாகக் கூறி வீட்டை தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.