கோயம்புத்தூர்: இரு சக்கர வாகனத்தில் செல்வது என்றால் அனைவருக்கும் அலாதி பிரியம் தான். அதுவும் ஓர் மாலை நேரத்தில் இதமான குளிர் காற்று வீசும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிக்க வேண்டும் என்பது பலருக்கு மிகவும் பிடித்த ஒன்று, இருந்தாலும் அது எல்லோருக்கும் அமைவதில்லை.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அன்னூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்மணி ஒருவர் தான் வளர்த்து வரும் நாட்டு இன நாய் ஒன்றை தனது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர வைத்து அழைத்துச் செல்லும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.