கோயம்புத்தூர்: மங்கலம், சாமளாபுரம் உள்ளிட்டப் பகுதிகளில் விசைத்தறி தொழிலுக்கு அடுத்ததாக விவசாயம் பிரதானத்தொழிலாக இருந்து வருகிறது. மேலும் கீரை வகைகள் இங்கு அதிகமாக பயிரிடப்படுவதால் வெளியூரில் இருந்து வரும் வியாபாரிகள் அதிகளவில் கீரைகளை வாங்கிச்செல்கின்றனர். மேலும் ஒரு சில வியாபாரிகள் நொய்யல் ஆற்றங்கரை ஓரம் இருக்கும் கீரைகளை அறுவடை செய்தும் காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம், சோமனூர் அடுத்த சாமளாபுரம் பகுதியிலுள்ள கழிவுநீர் கால்வாயில் வியாபாரி ஒருவர் கீரைகளை கழுவி எடுக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வியாபாரி ஒருவர் சாக்கடை அருகில் உள்ள கீரைகளை பறித்து, அதே நீரில் கழுவும் காட்சிகளை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
தற்போது அந்தக் காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “கோவையில் இருந்து வரக்கூடிய நொய்யல் ஆற்றின் கிளை வாய்க்காலில் முளைத்திருக்கும் கீரைகளை காய்கறி வியாபாரிகள் நாள்தோறும் பறித்து, அதே கழிவுநீரில் கழுவி, டன் கணக்கில் வியாபாரத்திற்கு கொண்டு செல்கின்றனர்.