கோவை:அருகேகாரமடை ஊராட்சி ஒன்றியத்தில் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி மன்றம் உள்ளது. ஊராட்சி மன்றத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த விமலா தலைவியாகவும், திமுகவைச் சேர்ந்த வினோத்குமார் துணைத் தலைவராகவும் உள்ளனர்.
இந்த ஊராட்சி மொத்தம் 7 கிராமங்களை உள்ளடக்கிய பெரிய ஊராட்சியாகும். இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் சாலை போட்டதுபோல் போலி பில் தயாரித்து மோசடி செய்ததாக சிக்கதாசம்பாளையம் ஊராட்சித்தலைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து லஞ்சம் ஒழிப்பு போலீசார் கூறுகையில், 'கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிக்கதாசம்பாளையம் ஊராட்சித்தலைவியாக இருப்பவர், விமலா (வயது 51). துணைத்தலைவர் வினோத்குமார்(40), காரமடை உதவி செயற்பொறியாளர் ராஜபாரதி(45), கோவை துணை கோட்ட உதவி செயற்பொறியாளர் ரமேஷ்(56), ஒப்பந்ததாரர்(40), சிக்கதாசம்பாளையம் சேரன் நகர் 2ஆவது பாலத்தில் இருந்து மகாலட்சுமி அவென்யூவரை சாலையை மேம்படுத்த ரூ.8 லட்சத்து 40 ஆயிரத்துக்கான திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டது.