தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் கார் தீ விபத்து: கார் முற்றிலும் நாசம் - கார் தீ விபத்து

கோயம்புத்தூர்: கருமத்தம்பட்டி அருகே ஓடும் காரில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் கார் முற்றிலும் நாசமானது.

A Car Fire Accident In Coimbatore  Car Fire Accident  Fire Accident  கோவையில் கார் தீ விபத்து  கார் தீ விபத்து  தீ விபத்து
A Car Fire Accident In Coimbatore

By

Published : Feb 16, 2021, 7:53 AM IST

திருப்பூர் மாவட்டம் அணைப்பாளையம்பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். பனியன் நிறுவன அதிபரான இவர் தனது நிறுவனத்தில் பணிபுரியும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரை ஊருக்கு வழியனுப்பி வைக்க தனது காரில் அவர்களை அழைத்துக்கொண்டு கோவை நோக்கி வந்துகொண்டிருந்தார்.

கருமத்தம்பட்டி கணியூர் சுங்கச்சாவடி அருகே வந்தபோது காரின் முன்பக்கம் திடீரென தீப்பிடித்ததால் அனைவரும் காரிலிருந்து இறங்கியுள்ளனர். காரில் மளமளவென தீப்பரவியதால் கார் முற்றிலும் எரிந்தது.

தீப்பிடித்து எரியும் கார்

இது குறித்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் காரில் பற்றிய தீயை முழுமையாக அணைத்தனர்.

இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இருப்பினும் காரில் பயணித்த ஐந்து பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த விபத்து காரணமாக சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதையும் படிங்க:வைக்கோல் பாரம் ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து!

ABOUT THE AUTHOR

...view details