கோயம்புத்தூர் : ஆனைகட்டி அடுத்த கேரளா மாநிலம் அட்டப்பாடி முருகலா பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர்கள், ஐயப்பன் - சரஸ்வதி தம்பதி. இவர்களின் நான்கு மாத பெண் குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், பாலக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. பிரேத பரிசோதனைக்கு பின் பாலக்காடு அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அப்போது தாடிக்கொண்டு பகுதி வரை மட்டுமே சாலை வசதி உள்ளது.