கோயம்புத்தூர்:ஆனைமலை அடுத்த அங்கலக்குறிச்சி அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் பழமை வாய்ந்த நந்தகோபால் சாமிமலை கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் அடிவாரத்திலிருந்து மழை உச்சி வரை ஆயிரத்து 500 அடி உயரம் கொண்டதாகும்.
இங்கு செல்வதற்கு கரடு முரடான பாதைகளில் நடை பாதையாக தான் செல்ல வேண்டும், படிக்கட்டுகள் கிடையாது. இக்கோயிலுக்கு சனிக்கிழமை மற்றும் அமாவாசை தினங்களில் உள்ளூர் மட்டுமல்லாமல், வெளியூரிலிருந்தும் அதிகளவில் பக்தர்கள் வந்து மலையேறி சாமி தரிசனம் செய்வர்.
இந்நிலையில் கோகுல அஷ்டமியை ஒட்டி இன்று (ஆக. 20) சனிக்கிழமை காலை கோபால்சாமி மலையில் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறுவர்கள் கிருஷ்ணர் வேடமணிந்து நடனமாடி, அங்கு தொங்கவிடப்பட்டிருந்த உரியை அடித்தனர்.