கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூர் புளியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜேஷ், ராஜலட்சுமி தம்பதி. இவர்களுக்கு வர்த்தினி , ஹரிவர்ஷினி (9) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். நான்காம் வகுப்பு படிக்கும் ஹரிவர்ஷினி (9) சிறுவயதில் இருந்தே கதைகள் கேட்பதில் ஆர்வமுடையவர்.
இந்நிலையில் தனது தாயார் ராஜலட்சுமி உதவியுடன் ஒன்பது சிறுவர்களுக்கான கதைகளை எழுதியுள்ளார்.
அதில் மூணு கண்ண வந்துட்டான், குக்கூ குக்கூ தவளை, குகைக்குள் பூதம், காட்டுக்குள் திருவிழா, அரை பல காணம் ஐந்து பூதங்கள், மேக்கப் போட்ட விலங்குகள், காண்டாமிருகம் எதுக்கு ஓடுது, நிசாசினியின் மீன் பொம்மைகள் என ஒன்பது கதைகளை எழுதியுள்ளார்.