கோயம்புத்தூர்:பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு வடபுதூர் பாரதி நகரில் குப்புசாமி என்ற விவசாயி தோட்டத்தில் மயில்கள் கொன்று வாழைத்தோட்டத்தில் புதைத்து வைத்திருப்பதாகப் பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் புகழேந்திக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கிணத்துக்கடவு அடுத்துள்ள வடபுதூர் பாரதி நகரில் குப்புசாமி என்பவரது தோட்டத்திற்குப் பொள்ளாச்சி வனத்துறையினர் விரைந்து சென்று அங்கு உள்ள வாழைத்தோப்பில் மூடப்பட்டிருந்த 3 குழிகளைத் தோண்டி பார்த்த போது அங்கு ஒரு ஆண்மயில் மற்றும் 8 பெண்மயில் என மொத்தம் 9 மயில்கள் இறந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து புதைக்கப்பட்ட 9 மயில்களை வனத்துறையினர் மீட்டு மயில்கள் புதைக்கப்பட்ட பகுதியில் ஆய்வுசெய்தபோது அங்கு அரிசி சிதறிக் கிடந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.