சில மாதங்களுக்கு முன்பு ரூ. 500 கோடி மோசடி வழக்கில் சிறைக்குச் சென்ற முல்லை ஜுவல்லரி நிறுவனர் குறிஞ்சி, கோவை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில், ' என் பெயரில் கோவை , ஈரோடு, மேட்டூர் , கோபிச்செட்டிபாளையம் ஆகியப் பகுதிகளில் கடை உள்ளது. என் மீது கூறப்படும் ரூ. 500 கோடி மோசடி வழக்குக் காரணமாக, கடந்த ஜூலை ஒன்றாம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி 5 மாதம் சிறையில் இருந்துவிட்டு நேற்று முன் தினம் தான், நான் விடுதலையாகி வந்தேன்.
ஆனால், நான் ரூ. 500 கோடி மோசடி செய்யததாகக் கூறப்படுவது முற்றிலும் பொய்யானது. நான் மக்களிடம் பெற்றது வெறும் ரூ. 9 கோடி தான். இந்தப் பணத்தை எனது வாடிக்கையாளர்களுக்கு தருவதற்கு தற்போது தயாராக உள்ளேன்.