இது தொடர்பாக கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் பேட்டியளித்த அவர் கூறுகையில், "தமிழ் மொழியை அரசு அனைத்து துறைகளிலும் பயன்படுத்த வேண்டும். தமிழ்நாட்டின் அனைத்து இந்து கோயில்களிலும் குடமுழுக்கு விழா தமிழில் கொண்டாட நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ் மொழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் 80 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
'தமிழில் கல்வி பயின்றவர்களுக்கு 80 விழுக்காடு இடஒதுக்கீடு வேண்டும்' - பேரூர் ஆதீனம் - அரசு பணிகளில் 80% இடஒதுக்கீடு வேண்டும்
கோவை: தமிழில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் 80 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தயிருப்பதாக பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் தெரிவித்துள்ளார்.
!['தமிழில் கல்வி பயின்றவர்களுக்கு 80 விழுக்காடு இடஒதுக்கீடு வேண்டும்' - பேரூர் ஆதீனம் perur-adheenam-marudasala-adikalar](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6211324-thumbnail-3x2-l.jpg)
perur-adheenam-marudasala-adikalar
பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார்
தமிழுக்கான ஆணையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 29ஆம் தேதி கோவை டாடாபாத் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தமிழ்மொழி காப்புக் கூட்டு இயக்கம் முடிவு செய்துள்ளது" எனத் தெரிவித்தார். மேலும், இந்தப் போராட்டத்தில் 60க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் பங்குபெற இருப்பதாகவும், அதில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:தருமபுரம் ஆதீனம் மறைவு; பக்தர்கள் சோகம்!