கோவை:பொள்ளாச்சி ஆனைமலை இந்திரா நகரில் அரசு வழங்கிய இலவச வீட்டு மனைப் பட்டா நிலத்தில் வழிபாட்டுத்தலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் 8 பேர் ஆனைமலை மாசாணியம்மன் கோயில் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அவ்வமைப்பின் நிர்வாகி கணேஷ், "ஆனைமலை மெகராஜ் பீபி என்பவருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பத்துடன் வசித்துவந்தார்.
பின்பு, திருப்பூரைச் சேர்ந்த அப்துல்லா என்பவரிடம் பதிவு செய்யப்படாத ஆவணம் மூலம் பணம் பெற்றுக்கொண்டு இடத்தை விற்பனை செய்துள்ளார்.
அந்த இடத்தில், தற்போது வழிபாட்டுத்தலம் கட்டப்பட்டுவருகிறது. இதனால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலை உள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டிக்கொள்வதற்காக அரசு கொடுத்த பட்டா நிலத்தில் வழிபாட்டுத்தலம் கட்டுவது தெரிந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தோம்.