கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் பன்னிமடை பகுதியில் 7 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார். இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கின் தீர்ப்பை, கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் நாளை வழங்க இருக்கும் நிலையில் இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை பெரியார் படிப்பகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் பொ.இரத்தினம், "பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் கூடுதலாக ஒரு நபரின் டிஎன்ஏ கலந்திருப்பதாக தகவல் அறிக்கையில் உள்ளது. இதனை மறு விசாரணை செய்யக்கோரி உயிரிழந்த சிறுமியின் தாயார் கோவை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.