கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜனவரி மாதத்தில் சர்வதேச பலூன் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நடத்தி வருகிறது.
அதேபோல், இன்று ஆறாவது ஆண்டாக சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சியில் தொடங்கியுள்ளது. இதில், நெதர்லாந்து, ஜப்பான் , தமிழ்நாடு சுற்றுலா கழகம் ஆகியவை சார்பாக மூன்று வெப்பக்காற்று பலூன்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தத் திருவிழாவானது வரும் ஜனவரி 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும், இதற்காக பிரத்தியேகமாக வெளிநாடுகளிலிருந்து பைலட்டுகள் அழைத்துவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.