கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி உலியம்பாளையத்தை சேர்ந்தவர் கல்லூரி மாணவி மோனிஷாரவி. இவர் 6057.92 சதுர அடியில் மிக பெரிய ஓவியத்தை வரைந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று தனியார் கல்லூரி உள்ளரங்கில் 13 மணி நேரத்தில் மிக பெரிய ஓவியத்தை வரைந்து சாதனை படைத்துள்ளார்.
இவர் கின்னஸ் சாதனை படைத்ததற்கான சான்றிதழ், கரோனா ஊரடங்கு காரணமாக வந்தடைய காலதாமதம் ஆகிவிட்டது. ஏற்கனவே, மாணவி மோனிஷாரவி முட்டையில் ஓடுகளில் இந்திய தலைவர்களின் உருவப்படங்களை வரைந்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.