தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உணவு கொடுக்கச் சென்ற நேரத்தில் 60 சவரன் நகைகள் கொள்ளை - கோவை அண்மைச் செய்திகள்

தந்தைக்கு உணவு கொடுத்துவிட்டு வீடு திரும்புவதற்குள், கதவை உடைத்து 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளை
கொள்ளை

By

Published : Jul 29, 2021, 9:30 PM IST

கோவை: பீளமேடு பகுதி ராமசாமி நகரைச் சேர்ந்தவர் அருள்மணி. இவரது தந்தை ஓய்வுபெற்ற விமான படை ஊழியர். தற்போது இந்தியன் எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். தாயார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

இந்நிலையில் அருள்மணி வழக்கம்போல், அவரது தந்தைக்கு மதிய உணவை அளித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருள்மணி, இது தொடர்பாக பீளமேடு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். பட்டப்பகலில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பிரியாணி கடை ஊழியரை வழிமறித்து ரூ.10 லட்சம் கொள்ளை

ABOUT THE AUTHOR

...view details