தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது மோதிய பள்ளி வேன்! - kovai latest news

கோவை: பொள்ளாச்சி அருகே வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் மீது தனியார் பள்ளி வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தார்.

kovai

By

Published : Nov 22, 2019, 7:14 PM IST

கோவை, பொள்ளாச்சி அருகேயுள்ள பொங்காளியூர் கிராமத்தைச் சேர்ந்த வீரதர்மராஜா என்பவரது மகன் சஸ்வந்த்(5). அங்கன்வாடியில் படித்து வரும் இச்சிறுவன் இன்று காலை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த அங்கலகுறிச்சியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வேன் சிறுவன் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிறுவன் சஸ்வந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோட்டூர் அரசு மருத்துவமனை

பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு வந்த கோட்டூர் காவல் துறையினர் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்கு கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேனை ஓட்டி வந்த பாலகிருஷ்ணன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பஞ்சாப் நேஷனல் வங்கி, லலிதா ஜுவல்லரி கொள்ளைக்கு பயன்படுத்திய சுற்றுலா வேன் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details