கோவை:மேட்டுப்பாளையம் சாலையில் இரவு நேரங்களில் திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8ம் தேதி இரவு துடியலூரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் வேலை செய்து வரும் பொன்னமராவதியைச் சேர்ந்த தர்மலிங்கம்(49) மற்றும் பிரவீன் ஆகியோர் ரேஸ்மிகா என்ற திருநங்கையிடம் பாலியல் இச்சைகாக சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இதில் திருநங்கை ரேஸ்மிகா சத்தமிடவே அருகில் இருந்த திருநங்கைகள் மம்தா, கவுதமி, ஹர்னிகா, ரூபி, கீர்த்தி உள்ளிட்டோர் அங்கு வந்து தர்மலிங்கம் மற்றும் பிரவீன் ஆகியோரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் பிரவீன் ஓடிவிட தர்மலிங்கத்தை கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இதில் படுகாயமடைந்த தர்மலிங்கம் தாமாகவே கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விழுந்து விட்டதாக கூறி சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.