முதலமைச்சர் சில நாள்களுக்கு முன்பு மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தை தொடங்கிவைத்தார். இதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் கோவை ஆர்.எஸ். புரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நடைபாதை வியாபாரிகள் காய்கறி, பழங்கள் வாங்க துணிப்பை எடுத்துவருபவர்களுக்கு 5 ரூபாய் தள்ளுபடி என்ற அறிவிப்பு செய்துள்ளனர்.
பொதுமக்களிடையே நெகிழிப் பைகளைத் தவிர்க்க வலியுறுத்தியும், துணிப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கும்விதமாகவும் இதனை அறிவித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.