கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த நந்தினி காலனி பகுதியில் நரிக்குறவர் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு வசிக்கும் மணிமாலன் என்பவரது வீட்டில் சட்டவிரோதமாக அவுட்டுக்காய் என்னும் நாட்டு வெடி தயாரிக்கப்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென பயங்கர சத்தத்துடன் அவுட்டாய் வெடித்தது.
இந்த விபத்தில் வீட்டின் மேல்கூரை சிதறியது. அவுட்டாய் தாயாரித்துக் கொண்டிருந்த மணிமாலன் (50), பூந்துறை (50), ராஜா (40), ராமராஜ் (35), வெற்றிவேல் (13) ஆகியோருக்கு கை மற்றும் கால்களில் பலத்தக்காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு சுதாரித்துக் கொண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.