முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என்று பாஜக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் குற்றஞ்சாட்டி வருகின்றன. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆதித் தமிழர் கட்சி என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
முரசொலி அலுவலகத்தின் மூல பத்திரத்தை கண்டுபிடித்தால் ரூ. 5 லட்சம் பரிசு...! கோவையை கலக்கிய போஸ்டர்கள்! - 5 lakh reward for person who found original document of Murasoli office
கோயம்புத்தூர்: முரசொலி அலுவலகத்தின் மூல பத்திரத்தை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ. 5 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும் என்ற ஆதித் தமிழர் கட்சியினரின் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ura
அதில், பஞ்சமி நிலமான முரசொலி அலுவலகத்தின் மூலப் பத்திரம் எங்கே? என்று கேள்வி கேட்டது மட்டுமின்றி முரசொலி அலுவலகத்தின் மூல பத்திர நகலை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ. 15 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதித் தமிழர் கட்சி என்ற பெயரிலும், கட்சியின் தலைவர் கல்யாணசுந்தரம் பெயரிலும் ராமநாதபுரம் ரயில் நிலையம், காந்திபுரம் உள்பட பல்வேறு நகர் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.