தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பூர் அருகே தனியார் பேருந்து, கார் மோதல்: உயிரிழப்பு எண்ணிக்கை 5ஆக உயர்வு! - இரண்டு பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

திருப்பூர் மாவட்டம், கொடுவாய் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூர் அருகே தனியார் பஸ், கார் மோதல்: 5 பேர் உயிரிழப்பு..!
திருப்பூர் அருகே தனியார் பஸ், கார் மோதல்: 5 பேர் உயிரிழப்பு..!

By

Published : Aug 5, 2022, 8:30 PM IST

கோவை: திருப்பூரில் இருந்து பழனி நோக்கி நேற்று காலை சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து கொடுவாய் அடுத்த காக்காபள்ளம் அருகே சென்றுகொண்டிருந்தபோது தாராபுரத்தில் இருந்து திருப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த மகேந்திரா எக்ஸ்யூவி கார் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரைத்தாண்டி பேருந்து சென்ற பாதையில் சென்று, பேருந்தின் மீது மோதியுள்ளது.

இதில் பேருந்தும் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் பயணித்த கோவையைச் சேர்ந்த வீரக்குமார், மகேஷ்குமார், சுஜித் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரில் பயணித்த மூன்று பேர் ஆபத்தான நிலையில் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதில் மேலும் இருவர் உயிரிழந்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. காரில் சென்ற மேலும் ஒருவர் மற்றும் பேருந்தில் சென்ற இரண்டு பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கடந்த 8 ஆண்டுகளில் ரயில்வேயில் 3.5 லட்சம் பேருக்கு வேலை... அடுத்து?

ABOUT THE AUTHOR

...view details