கோயம்புத்தூர் மாவட்டம் விசுவாசபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். அவர், அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று(நவ.07) வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். அதையடுத்து, இன்று(நவ.08) காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
நகைக்கடையில் 5 கிலோ வெள்ளி, 10 சவரன் தங்க நகைகள் கொள்ளை! - silver and gold jewelery looted in coimbatore
கோயம்புத்தூர்: விசுவாசபுரத்தில் உள்ள நகைக்கடையில் 5 கிலோ வெள்ளி, 10 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
jewelery shop in coimbatore
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, கடையிலிருந்த 5 கிலோ வெள்ளி, 10 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. அது குறித்து அப்பகுதி காவல் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:ஓடும் பேருந்தில் பெண்ணிடமிருந்து 12 பவுன் நகை கொள்ளை!