கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஜமீன் ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 44 வயதான பூ வியாபாரி ஒருவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கரோனா இருப்பது நேற்று முன்தினம் (ஆக.09) உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சிகிச்சைக்காக அவர் மருத்துவமனை செல்ல இருந்ததாகக் கூறப்படுகிறது.
கரோனா: மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பூ வியாபாரி உயிரிழப்பு - Corona details
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பூ வியாபாரி மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
Coimbatore corona cases
இந்நிலையில், நேற்று அதிகாலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவசரஊர்தி மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் உடல் பொள்ளாச்சி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் குடியிருந்த பகுதியில் சுகாதாரத்துறையினர், பேரூராட்சி பணியாளர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.