கோவை:திறந்தவெளியில் குப்பைக்கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்று நோயும் பரவுகிறது. இதைத் தடுக்க தமிழ்நாடு அரசும், சில தொண்டு நிறுவனங்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் "யங் இந்தியா" தன்னார்வ அமைப்பு, பல்வேறு சமூக சேவைகளை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
அதன்படி, நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்தும் எளிய வடிவிலான குப்பைத் தொட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவை முதற்கட்டமாக மாநகர காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும் போது, சாலைகளில் குப்பையை வீசாமல் இருப்பதற்காக இந்த முயற்சியை யங் இந்தியா அமைப்பு முன்னெடுத்துள்ளது.