தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை அருகே ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு! - தண்டவாளத்தில் நடந்து சென்ற கல்லூரி மாணவர்கள்

இருகூர்: கோவை ராவூத்தர் பாலம் அருகே தண்டவாளத்தில் நடந்துசென்ற நான்கு கல்லூரி மாணவர்கள் ஆலப்புழா - சென்னை விரைவு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Four College students killed

By

Published : Nov 14, 2019, 6:52 AM IST

Updated : Nov 14, 2019, 10:07 AM IST

இன்று அதிகாலை கோவை தனியார் கல்லூரியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கோவை இருகூர் அருகேயுள்ள ராவுத்தர் பாலத்தின் மீது தண்டவளத்தில் நடந்துசென்றுள்ளனர்.

அப்போது ஆலப்புழாவிலிருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த விரைவு ரயில் எதிர்பாராதவிதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே நான்கு மாணவர்களும் உயிரிழந்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த மேலும் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை செய்துவருகின்றனர்.

கோவை அருகே ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு

முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்த கல்லூரி மாணவர்கள் சித்திக் ராஜா, கருப்பசாமி, ராஜசேகர், கௌதம் என்பது தெரியவந்துள்ளது. அடுத்தகட்ட விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

Last Updated : Nov 14, 2019, 10:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details