தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜகவினர் நடத்தி வந்த கடையில் டீசல் பாக்கெட் வீசிய வழக்கில் 4 பேர் கைது - டீசல் பாக்கெட் வீசி எரிக்க முயற்சி

ஈரோட்டில் பாஜகவினர் நடத்தி வந்த கடையில் டீசல் பாக்கெட் வீசிய வழக்கில் எஸ்டிபிஐ, நிர்வாகி உள்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பாஜகவினர் நடத்தி வந்த கடையில் டீசல் பாக்கெட் வீசிய வழக்கில் 4 பேர் கைது
பாஜகவினர் நடத்தி வந்த கடையில் டீசல் பாக்கெட் வீசிய வழக்கில் 4 பேர் கைது

By

Published : Sep 25, 2022, 10:54 PM IST

கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 22ஆம் தேதி இரவு என்.ஐ.ஏ.,நடத்திய சோதனைக்கு பின் மேற்கு மண்டலத்தில் 9 இடத்தில் வாகனம் மற்றும் கடைகளை சேதப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

பொள்ளாச்சியில் 5 சம்பவமும், மேட்டுப்பாளையத்தில் 2 சம்பன்ங்களும், ஈரோடு 1, புளியம்பட்டி 1 என ஒன்பது இடங்களில் எரிபொருள் வீச்சு சம்பவம் நடைபெற்றது. ஈரோடு பாஜக இளைஞர் அணி பொறுப்பாளர் தட்சிணாமூர்த்தி என்பவர் கடையில் டீசல் பாக்கெட் வீசி எரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிசதாம் உசேன் (25) கைது செய்யப்பட்டுள்ளார். குற்றத்தில் தொடர்புடைய அவரின் நண்பர்கள்
ஆசிக் (23), கலீல்ரகுமான் (28),ஜாபர் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் குற்றத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளோம்.

பாஜகவினர் நடத்தி வந்த கடையில் டீசல் பாக்கெட் வீசிய வழக்கில் 4 பேர் கைது

ஒட்டுமொத்தமாக திட்டம் தீட்டி சம்பவம் நடைபெறுகிறதா அல்லது தனிப்பட்ட விதமாக நடைபெறுகிறதா என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. சிசிடிவி, சிடிஆர் அனலைஸ், மற்றும் வாகன தணிக்கை மூலம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தவறு செய்தால் சிக்குவார்கள். தற்போது சூழலை மாற்றியுள்ளோம். சம்பவம் அன்று ஒரு இரவு தான் நடந்தது. தற்போது கைது நடவடிக்கை தொடங்கிவிட்டது. கோவை மாவட்டத்தில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். திருப்பூரில் ஆயிரம் போலீசார், ஈரோட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:‘கோவை பெட்ரோல் குண்டு விவகாரத்தில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது’ - அமைச்சர் செந்தில் பாலாஜி

ABOUT THE AUTHOR

...view details