தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மானை வேட்டையாடிய 4 பேர் கைது - Coimbatore

கோயம்புத்தூர்: மான் வேட்டையாடிய 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

மானை வேட்டையாடிய 4 பேர் கைது

By

Published : May 5, 2019, 4:56 PM IST

பொள்ளாச்சி அடுத்த செமணாம்பதி ,செம்மேடு ஆகிய பகுதிகளில் சிலர் மான் வேட்டையில் ஈடுபடுவதாக வனத்துறையினருக்கு புகார் வந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் காசிலிங்கம் தலைமையில் விசாரணையில் ஈடுபட்டனர்.

மானை வேட்டையாடிய 4 பேர் கைது

இதில், செம்மேடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (48 )மாரப்பக் கவுண்டன் புதூரை சேர்ந்த தமிழரசன் (38) பெரியபோதுவை சேர்ந்த சுந்தர்ராஜ் ( 51 ) கேரள மாநிலம் நெடும்பாறையை சேர்ந்த பிரகாஷ் (29) மாரப்பக் கவுண்டன் புதூரை சேர்ந்த துரைசாமி (62 ) ஆகியோர் மானை வேட்டையாடியது தெரியவந்தது.

இதனையடுத்து, மான் வேட்டையாடிய 4 பேரும் 1972 வனப் பாதுகாப்பு சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மான் வேட்டைக்குப் பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி, இரட்டை குழல் துப்பாக்கி, 100 கிராம் மருந்து போன்றவையும் கைப்பற்றப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details