கோயம்புத்தூர் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 18ஆம் தேதியன்று காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், ராமநாதபுரம் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு காணாமல் போன சிறுமியை தேடிவந்தனர்.
இந்த நிலையில் ராமநாதபுரம் புலியகுளம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவரது மகன் இன்பாண்ட் டேனியல் (25) என்பவருடன் சிறுமி மதுரைச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் காவல் துறையினர் மதுரைக்குச் சென்று இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், இருவரும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாகவும், இருவர் வீட்டிலும் பெற்றோர் சம்மதம் கிடைக்காது என்பதால், வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.