தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அட்டைப்பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 320 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்! - Prohibited Kutka seizure coimbatore

கோவை: கடைகளில் அட்டைப்பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட 320 கிலோ குட்கா பொருட்கள் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

kovai

By

Published : Nov 13, 2019, 11:18 PM IST

கோவையில் மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் 6 குழுக்களாக பிரிந்து ராஜவீதி, தாமஸ் வீதி, வைசியால் வீதி போன்ற இடங்களில் உள்ள கடைகள் மற்றும் குடோன்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்தச் சோதனையில் ராஜவீதியில் அட்டைப்பெட்டிகளில் மறைத்து வைத்திருந்த தடைசெய்யப்பட்ட 320 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த குட்கா பொருட்களின் விலை சுமார் 3.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட 5 கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, 8 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சோதனையில் சிக்கிய தடைசெய்யப்பட்ட குட்கா

இதுபோன்ற சம்பவங்கள் கோவையில் அதிகம் நடைபெறுவதாகவும், அதைத்தடுக்க அரசு இவ்வாறு திடீர் சோதனைகளில் ஈடுபடும் என்றும் மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் தெரிவித்தார். இந்த குட்கா பொருட்கள் பெரும்பாலும் பள்ளி - கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்கப்படுகிறது என்றும், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்றால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க:மளிகைக் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 190 கிலோ கிராம் குட்காபறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details