தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் யூ-ட்யூப் மூலம் மக்களை ஏமாற்றி ரூ.300 கோடி மோசடி - கோவையில் யூடியூப் மூலம் மக்களை ஏமாற்றி 300 கோடி மோசடி

கோவையில் யூ-ட்யூப் மூலம் மக்களை ஏமாற்றி 300 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளது.

கோவையில் யூடியூப் மூலம் மக்களை ஏமாற்றி 300 கோடி மோசடி
பல கோடி மோசடி பணத்தை மீட்டுத்தர வேண்டி பாதிக்கப்பட்டோர் புகார்

By

Published : Feb 15, 2022, 2:29 PM IST

கோயம்புத்தூர்: சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விமல் குமார். மிஸ்டர் மணி என்ற பெயரில் யூ-ட்யூப் சேனல் நடத்திவருகிறார். சேனல் லைவ்வுக்காக கோவை காளப்பட்டி பகுதிக்கு அவ்வப்போது செல்லும் அவர், அங்குள்ள பொதுமக்களிடம் பணத்தை போரெக்ஸ் டிரேட் எனப்படும் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.

இதற்காக மாவட்டந்தோறும் அலுவலகம் அமைத்து இண்டிரொடியூசிங் புரோக்கர் எனப்படும் அறிமுக நபர்களை மாதம் 50 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் நியமித்து, அவர்கள் மூலம் பணத்தைத் திரட்டியுள்ளார். இதையடுத்து மாநிலம் முழுவதும் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் தலா ஒரு லட்சம் வீதம் பணம் செலுத்தியுள்ளனர்.

பல கோடி மோசடி பணத்தை மீட்டுத்தர வேண்டி பாதிக்கப்பட்டோர் புகார்

சுமார் 300 கோடி ரூபாய் பணம் திரட்டப்பட்டிருந்த நிலையில், ஊதியத்தையும் கொடுக்காததோடு, வட்டித் தொகையையும் தராமல் இருந்ததால் சந்தேகமடைந்த முதலீட்டாளர்கள் விமல் குமாரையும் அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகியோரைத் தொடர்புகொள்ள முயன்றுள்ளனர்.

கோவையில் யூ-ட்யூப் மூலம் மக்களை ஏமாற்றி ரூ. 300 கோடி மோசடி

ஆனால் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருப்பதோடு, அலுவலகமும் மூடப்பட்டிருப்பதால், ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

பல கோடி மோசடி பணத்தை மீட்டுத் தர வேண்டி பாதிக்கப்பட்டோர் புகார்

இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த திருச்சி, ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் முகக் கவசம் அணிந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் விமல் குமாரையும், ராஜேஸ்வரியையும் கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதையும் படிங்க: LIC IPO: 'நல்லரசு என்பது நிறுவனங்களைக் கட்டியமைக்க வேண்டும்; விற்கக்கூடாது' - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details