தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அக்காமலையில் 3 வயது மதிக்க தக்க ஆண் யானை உயிரிழப்பு - coimbatore news

கோயம்புத்தூர்: வால்பாறையை அடுத்த அக்காமலை மரப்பாலம் பகுதியில் 3 வயது மதிக்க தக்க ஆண் யானை உயிரிழந்துள்ளது.

coimbatore akkamalai 3 years old male elephant dies
அக்காமலையில் 3 வயது மதிக்க தக்க ஆண் யானை உயிரிழப்பு

By

Published : May 2, 2021, 9:47 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை ஆனைமலை பகுதியில், புலிகள் காப்பகத்திற்கு சொந்தமான, ரேஞ்ச் ஊசிமலை பீட்டிற்கு சொந்தமான மரப்பாலம் பகுதியிலுள்ள சரிவில், 3 வயது மதிக்க தக்க ஆண் யானை உயிரிழந்து இரண்டு நாட்கள் ஆகிய நிலையில், துர்நாற்றம் வீசிய நிலையில் கிடந்துள்ளது.

இதனை கண்ட வேட்டை தடுப்பு காவலர்கள் கொடுத்த தகவலின்படி, பொள்ளாச்சி வன துணை இயக்குனர் சேவியர் ஆரோக்கியராஜ் அறிவுறுத்தலின்படி, அட்டகட்டி வன மேலாண்மை இயக்குனர் ACF செல்வம், மாணாம்பள்ளி வன சரகர் மணிகண்டன் தலைமையில், வன கால்நடை மருத்துவர்கள் சுகுமாரன் மெய்யரசன் ஆகியோர் கலந்துகொண்டு, உடற் கூறு ஆய்வு மேற்கொண்டனர்.

தற்போது உயிரிழந்த குட்டி யானை ஆண் ஏன்றும், அதன் வயது 3 ஏனவும், இது நில சரிவில் சிக்கி ஏழுந்து நிற்க முடியாத நலையில் உயிரிழந்து இருக்கலாம் ஏன கூறினார்கள். மேலும் இந் நிகழ்ச்சியில் NCF கணேஷ் மற்றும் முணியாண்டி ஃபாரஸ்ட் கீர்த்தி குமார் மற்றும் ஏராளமான வேட்டை தடுப்பு காவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:புதுச்சேரியில் மலிவு விலையில் உணவு: தமிழிசை தொடங்கிவைப்பு

For All Latest Updates

TAGGED:

elephant

ABOUT THE AUTHOR

...view details