கோவை:தமிழ்நாடு முழுவதும் கடந்த 1ஆம் தேதி 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், கோவை மாவட்டம் சுல்தான்பேட்டையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சுழற்சி முறையில் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் மூன்று பேரும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அப்பள்ளிக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
3 மாணவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சுகாதாரத் துறையினர் இன்று(செப். 6) கரோனா பரிசோதனை மேற்கொள்ளவுள்ளனர். தொற்று உறுதிசெய்யப்பட்ட 3 மாணவர்களுக்கும் எவ்வித அறிகுறிகளும் தென்படவில்லை என்பதும், நாமக்கல், சேலம், புதுக்கோட்டையிலும் பள்ளி மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மாணவர்களுக்கு கரோனா - பள்ளி திறப்பு சரியா?