தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2 கிலோ தங்க செயினில் 3 மி.கி. மட்டுமே தங்கம்: ரூ.1 லட்சத்துடன் தப்பியவர்களை தேடும் போலீஸ்! - கோவையில் போலி நகை கொடுத்து பெண் ஏமாற்றம்

கோவையில் குறைந்த விலையில் தங்கம் தருவதாகக் கூறி, இரண்டு கிலோ அலுமினிய செயினை கொடுத்து பெண்ணிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்து தலைமறைவாகிய நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

அலுமினிய செயின்
அலுமினிய செயின்

By

Published : May 30, 2022, 3:55 PM IST

கோயம்புத்தூர்:கோவை மாவட்டம், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சரவணன் - இந்திராணி தம்பதியினர் ஆர்த்தி ஸ்டோர்ஸ் என்ற கடையை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்திராணி கடையில் இருந்தபோது, இரண்டு இளைஞர்கள், ஒரு பெண் கடைக்கு வந்து இந்திராணியிடம் 3 மில்லிகிராம் தங்க நகையை கொடுத்து உள்ளனர்.

அலுமினிய செயின்

மேலும், எங்களிடம் 2 கிலோ தங்கம் இருப்பதாகவும் ரூ.1 லட்சம் கொடுத்தால் அதை கொடுப்பதாகவும் இந்திராணியிடம் அவர்கள் கூறியுள்ளனர். இதனை உண்மை என நம்பி, இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்திராணி அந்த கும்பலிடம் ரூ.1 லட்சம் கொடுத்து, 2 கிலோ தங்க செயினைப் பெற்றுள்ளார். இதையடுத்து, இந்திராணி அருகில் உள்ள தங்க நகை கடைக்குச் சென்று செயினை சோதனை செய்தபோது, அது தங்கம் இல்லை என்பதும்; 2 கிலோ அலுமினியம் என்பதும், 3 மி.கி., மட்டுமே தங்கம் என்பதும் தெரியவந்துள்ளது.

அலுமினிய செயின்

அதிர்ச்சியடைந்த இந்திராணி இது குறித்து பந்தயசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மதத்தை மறைத்து திருமணம் செய்ததாக கணவர் மீது பெண் பரபரப்பு புகார்!

ABOUT THE AUTHOR

...view details