கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து புதிய வகை போதைப் பொருட்களை விற்பனை செய்யும் கும்பல் குறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடந்த இருவாரங்களில் புதிய வகை போதைப் பொருட்களை விற்பனை செய்த பலரை காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.
கைதானவர்கள் கொடுத்தத் தகவலின்பேரில் கேரளாவைச் சேர்ந்த சிலர், மயிலேறிபாளையம் பகுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர், மயிலேரிபாளையம் பகுதியிலிருந்த கேரளாவைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கேரளாவைச் சேர்ந்த பில்ஜூலால், அர்ஜூன்பிரசாத், சாரங் ஆகிய மூன்று பேரிடமிருந்து போதை மருத்து தடவிய அட்டை, மெத்தாம்பெடாமைன் எனப்படும் போதை மருந்து, 1.25 கிலோ கஞ்சா உள்ளிட்வைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள் கேரளாவைச் சேர்ந்த அந்த நபர்கள் கோவையில் தங்கி கல்லூரி மாணவர்கள், ஐ.டி துறை ஊழியர்களை குறிவைத்து அவ்வப்போது பெரிய அளவில் பார்ட்டி நடத்தி வந்திருப்பதும், இதுபோன்று பார்ட்டி நடத்தி இந்த புதிய வகை போதை பொருட்களை விநியோகம் செய்திருப்பதும் தெரியவந்தது. மேலும், இது தொடர்பாக மேலும் சிலரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:சீர்காழியில் நான்கு குடிசை வீடுகள் எரிந்து சேதம்