தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைன் சூதாட்டம்: கோயம்புத்தூரில் மூவர் கைது - ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

கோயம்புத்தூர்: ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோயம்புத்தூரில் மூவர் கைது
கோயம்புத்தூரில் மூவர் கைது

By

Published : Dec 30, 2020, 9:42 PM IST

கோயம்புத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் ரா.அருளரசு உத்தரவின்படி, மாவட்டத்தில் ஆன்லைன் சூதாட்டம் நடைபெறாமல் இருக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் கேஜி சிவகுமார் தலைமையிலான குழுவினர், பொள்ளாச்சி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் ஆன்லைன் சூதாட்டம் நடைபெறுவதாக மேற்கு காவல் நிலைய காவலர்களுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து ஆய்வாளர் வைரம் தலைமையிலான காவலர்கள், குமரன் நகர் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கார்த்தி, ராமசாமி, பாலகோபால் ஆகியோரை கைது செய்த காவலர்கள், அவர்களிடமிருந்த 7 ஆயிரத்து 200 ரூபாய் பணத்தையும், சூதாட்டத்திற்கு பயன்படுத்திய துண்டு சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர். மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:ஏய் நிறுத்து...எடு பர்ஸ...எவ்வளவு பணம் இருக்கு... அடி வாங்கிய போலி எஸ்.ஐ!

ABOUT THE AUTHOR

...view details