கோவை:பொள்ளாச்சி குமரன் நகரைச் சேர்ந்தவர் பொன்ராஜ் இவர் பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புசாரா தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் கடந்த 23ஆம் தேதி இரவு வீட்டின் வெளியே நிறுத்தியுள்ள காரின் கண்ணாடியை உடைக்கும் சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்த போது இரு சக்கர வாகனங்கள் வந்த நபர்கள் காரை பயங்கர ஆயுதங்களால் உடைத்து சேதப்படுத்தி தப்பி ஓடினர்.
அதே பகுதியில் இந்து முன்னனியை சேர்ந்த சிவா மற்றும் சரவணன் ஆகியோர் வீடுகளுக்கு சென்ற அந்த கும்பல் சாலை ஓரத்தில் நிறுத்தி இருந்த ஆட்டோக்கள் மற்றும் கார் மீது பலத்தை ஆயுதங்களால் தாக்கி சேதப்படுத்தினர்.