தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் கஞ்சா விற்பனை - 3 பேர் கைது! - கஞ்சா

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா
கஞ்சா

By

Published : Jul 22, 2022, 11:04 PM IST

கோவை:கஞ்சா விற்பனையை ஒழிக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பேருந்து மூலம் கஞ்சா எடுத்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து மப்டியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை பேருந்து மூலம் திண்டுக்கலில் இருந்து வந்த நபரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவரது பையில் இருந்து 28 கிலோ கஞ்சா மற்றும் 3 லட்சம் ரூபாய் இருந்துள்ளது; அதனை பறிமுதல் செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தியதில் அவரது பெயர் பிரவீன் என தெரியவந்தது.

தொடர்ந்து திண்டுக்கல் சென்று பிரவீனின் கூட்டாளிகளான தர்மராஜ் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து கோவை காட்டூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கோவையில் போதை சாக்லேட் விற்பனை - ராஜஸ்தான் மாநில வியாபாரி கைது!

ABOUT THE AUTHOR

...view details