ரயில் மோதி யானைகள் உயிரிழப்பு - தண்டவாளத்தை கடக்க முயன்றபோது யானைகள் உயிரிழப்பு
21:58 November 26
கோவை : நவக்கரை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற காட்டு யானைகள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நவக்கரை அடுத்த மாவுதம்பதி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் இன்று இரவு 9 மணி அளவில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்று இரண்டு குட்டிகளுடன் தண்டவாளத்தை கடக்க முயன்றது.
அப்போது அந்த வழியாக வந்த மங்களூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் யானைகள் மீது மோதியது. இதில் மூன்று காட்டு யானைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.
கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில்,சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை மருத்துவ குழுவினர் தண்டவாளத்தில் இருந்து யானைகளை அப்புறப்படுத்தி பிரேத பரிசோதனை மேற்கொள்ள ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.