கோவை மத்திய சிறைக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் காந்திபுரம் பகுதியில் இயங்கி வரும் நிலையில், நன்னடத்தை கைதிகளை போலீசார் அங்கு பணியமர்த்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை (அக். 29) பெட்ரோல் பங்கில் பணியிலிருந்து கூடலூர் மகளிர் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைதான விஜய் ரத்தினம் என்ற கைதி தப்பி ஓடினார். இச்சம்பவம் குறித்து கோவை காட்டூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தலைமை இயக்குனர் அமரேஷ் புஜாரி, பணியிலிருந்த ஜெகநாதன், கனிராஜ், விக்னேஷ் குமார் ஆகிய காவலர்களை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மூன்று காவலர்களையும் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார்.
இதையும் படிங்க:கோவை மத்திய சிறையில் இருந்து போக்சோ கைதி தப்பியோட்டம்.. பெட்ரோல் பங்க் பணியின் போது தப்பியதாக தகவல்!