தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 3 பேர் போக்சோவில் கைது - coimbatore district news

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த 3 பேரை போக்சோவில் காவல் துறையினர் கைது செய்தனர்.

3 பேர் போக்சோவில் கைது
3 பேர் போக்சோவில் கைது

By

Published : Jan 28, 2021, 11:04 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த 14ஆம் தேதி முதல் காணாமல் போனார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், சிறுமியை கண்டுபிடித்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் சிறுமி தன்னை மூன்று பேர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறினார்.

உடனே இதில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த ஹரி குமார், பிரவீன் குமார், சபரிராஜன் (எ) சூர்யா ஆகிய மூவரை போக்சோவில் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வீடியோவை காட்டி மதம் மாற வற்புறுத்திய இளைஞர் கைது

ABOUT THE AUTHOR

...view details