தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சியில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது - கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

பொள்ளாச்சியில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது
பொள்ளாச்சியில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

By

Published : Apr 29, 2021, 6:11 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருட்டு, வழிப்பறி சம்பந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின்படி காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையில் தனிப்படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தெப்பகுளம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த சங்கரபாண்டி, பிரகாஷ், முத்துச்சாமி ஆகியோரை மடக்கி விசாரித்தனர். அதில் அவர்கள் தொடர் திருட்டு, வழிபறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

பின்னர் மூவரையும் கைதுசெய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம், நகை, 20 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றைப் பறிமுதல்செய்தனர். தொடர்ந்து மூவரும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: பொருள்கள் வாங்குவதுபோல நடித்து ரூ.3 லட்சம் திருடிய பெண்

ABOUT THE AUTHOR

...view details