கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்நிலையில், நேற்று (ஆக.10) 292 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவையில் ஏழாயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு
கோயம்புத்தூர்: கரோனா தொற்று அதிகளவில் பரவிவரும் நிலையில், நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 292 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Coimbatore corona cases
இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 961ஆக உயர்ந்துள்ளது. இதில், கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 388 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 268ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் கரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.