கன்னியாகுமரி :நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், "அதிமுகவில் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக நீடித்து வந்த பிரச்னைக்கு இன்று தீர்வு காணப்பட்டுள்ளது. இதற்கு எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்வதோடு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
”2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக உடன்கூட கூட்டணி அமையலாம்” - பொன்.ராதாகிருஷ்ணன் அதிரடி! - பாஜக பொன்.ராதாகிருஷ்ணன்
2021ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக, அதிமுக அல்லது வேறு கட்சிகளுடன்கூட கூட்டணி அமையலாம் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
bjp
2021ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி அமையும். அதில், அதிமுக, திமுக அல்லது பிற கட்சிகளுடன்கூட கூட்டணி அமையலாம். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் அமைத்த கூட்டணி இன்றளவும் தொடர்ந்து வருகிறது.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சியோடு கூட்டணி என்பது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தலைமை முடிவெடுக்கும்” என்றார்.