கோயம்புத்தூர்:கிணத்துக்கடவு வடபுதூர் கோவை-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் பரோடா பேங்க் அருகே வசித்து வருபவர் பஞ்சலிங்கம் (53). லாரி உரிமையாளரான இவர் நேற்று (ஜன.15) தனது வீட்டில் இருந்துள்ளார்.
அப்போது, மதியம் 1 மணியளவில் அவரது வீட்டிற்கு இன்னோவா காரில் வந்த ஐந்து டிப்டாப் ஆசாமிகள் நாங்கள் வருமான வரித்துறையிலிருந்து வருகிறோம், உங்கள் வீட்டை சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி பஞ்சலிங்கத்திடமிருந்து செல்போனை வாங்கிக் கொண்டு வீட்டை தாழிட்டு சோதனை செய்வது போல் நடித்துள்ளனர். பீரோவில் வைத்திருந்த 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், பரோடா வங்கி கணக்கு புத்தகம், செக் புக் ஆகியவற்றை எடுத்துக்கொண்டதுடன் சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவான ஹார்ட் டிஸ்க்யையும் திருடிச் சென்றுள்ளனர்.