தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாபர் மசூதி இடிப்பு தினம் பாதுகாப்புக்காக கோவையில் 2000 போலீஸ் குவிப்பு! - பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று கோவை மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் காவலர்கள்

கோவை: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, இன்று கோவை மாவட்டம் முழுவதும் ஏடிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் சுமார் 2 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Babri Mosque Demolition Day
கோவையில் 2000 போலீஸ் குவிப்பு

By

Published : Dec 6, 2019, 5:50 PM IST

அயோத்தி நிலம் குறித்துத் தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து, பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் மக்கள் கூடும் பொது இடங்களில் பலத்தப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்டத்தில் ஏடிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில், சுமார் 2 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் . கோவை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, மோப்ப நாய்களுடன் விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் 2000 போலீஸ் குவிப்பு

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரயில்வே காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் கூறுகையில்," கோவை ரயில் நிலையத்தில் 200 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விதியை மீறி, ரயில் பாதைகளில் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆபத்தான இடங்களில் மக்கள் செல்ஃபி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ரயில் பாதைகளில் மது அருந்துவதைத் தடுப்பதற்கு ரயில் பாதைக்கு அருகே உள்ள மதுக்கடைகளைக் கண்டறிந்து அவற்றை இடமாற்றம் செய்யக்கோரி, மாவட்ட ஆட்சியர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளோம். தற்போது, ரயில்வே காவல் துறையில் 20 விழுக்காடு காவலர்கள் பற்றாக்குறை உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: சத்தீஷ்கரில் நடன மங்கை கூட்டு பாலியல் வன்புணர்வு.!

ABOUT THE AUTHOR

...view details