தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கண்காணிப்புக் குழு சோதனையில் 2 லட்சம் ரூபாய் பறிமுதல் - monitoring team raid

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே மீனாட்சிபுரம் ரயில்வே கேட் பகுதியில் தேர்தல் கண்காணிப்புக் குழு நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட இரண்டு லட்சம் ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டது.

By

Published : Mar 5, 2021, 9:55 PM IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவித்ததையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு, செயல்பாட்டில் உள்ளன.

இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆனைமலை அருகே உள்ள மீனாட்சிபுரம் ரயில்வே கேட் பகுதியில் நிலையான கண்காணிப்புக் குழு வாகன சோதனை நடத்தியது.

அப்போது அந்த வழியாக வந்த பெரியபோது பகுதியைச் சேர்ந்த ராமு என்பவரின் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அதில் உரிய அனுமதியின்றி இரண்டு லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது.

கண்காணிப்புக் குழு சோதனையில் இரண்டு லட்சம் ரூபாய் பறிமுதல்

அந்தப் பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அந்தப் பணம் ஆனைமலை தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டுவரும் வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதித் தேர்தல் நடத்தும் அலுவலர் துரைசாமியிடம் நிலையான கண்காணிப்புக் குழுவினர் ஒப்படைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details